விசேஷங்கள்
நமது சமூகத்தில் நமக்கே உரிய பாரம்பரியம் மற்றும் பண்பாட்டோடு திருமணம் முதல் சகல விசேஷங்களும் நடத்தப்படுகின்றன.
நமது வழக்கப்படி எவ்வாறு பல்வேறு விசேஷங்கள், பண்டிகைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதை அறியப்படுத்துவதோடு,
எப்படி செய்ய வேண்டும் என்ற வழிகாட்டியாகவும் இவை உதவும்.
கீழ்க்கண்ட விசேஷங்களுக்கான விபரங்கள் தரப்பட்டுள்ளன.
- திருமணம் - பெண் கேட்டு விடுவது முதல் நிச்சயதாம்பூலம், திருமணநாள் அன்று செய்யும் சீர்கள், சடங்குகளோடு எழுதிங்கள் மற்றும் அருமைசீர் தவிர திருமணத்திற்க்குப்பின் இரண்டாவது தீபாவளி வரை செய்யப்படும் சீர்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.
- அது தவிர, நம் ஐந்நூற்றுவர் சமூகத்திற்க்கு மட்டுமே உரித்தான "ஊஞ்சல் பாட்டு" மற்றும் திருமண நாளன்று தேவைப்படும் சாமான்கள் லிஸ்டும் தரப்பட்டுள்ளன.
- மற்ற விசேஷங்கள் - திருவாதிரை/பொங்கல் சீர் முதல் குழந்தை நாமகரணம்,பூப்புநன்னீராட்டு விழா வரையான விசேஷங்களுக்கான விபரங்கள்.
- பண்டிகைகள் - பொதுவாகக் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றிய விபரங்களோடு நமது சமூகத்திற்க்கே உரிய சிறப்பான பண்டிகைகளான திருவாதிரை, பிள்ளையார் நோன்பு, தமிழ் வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி,ஆடி நோன்பு, ஆடிப்பதினெட்டு, ரத சப்தமி, உகாதி ஆகிய பண்டிகைகள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.
- பிற காரியங்கள் - நம்மவர் சிவபதம் அடைந்தது முதல் 12ஆம் நாள் வரையிலான செய்ய வேண்டிய இறுதிச்சடங்குகள், தேவையான சாமான்கள் இவற்றோடு இறுதிச்சடங்கில் பாடப்படும் "திருப்பொற்சுண்ணம்" பாடலும் தரப்பட்டுள்ளது