மற்ற சீர்கள் – சுப காரியங்கள்
• இது மார்கழி மாதத்தில் திருவாதிரையன்று ஒரு பெண்ணுக்கு அவளின் தாய் தந்தையரால் கொடுக்கப்படும் சீருக்கு திருவாதிரைச் சீர் என்று சொல்லுவர். பெ
• ண்ணின் பெற்றோர், உற்றார் உறவினருக்கு சீர் கொடுப்பபது பற்றி முன்னனதாகவே சொல்லி வைத்துவிடுவார்கள். பெற்றோரும், உறவினருடன் வரும்போது பெரியதவலைப்பானை ஒன்று, தாம்பாளம் இரண்டு மற்றும் இதர சாமான்கள் அவர்கள் விருப்பம் போல், அரிசி மூட்டை ஆகியவைகளை பெண் வீட்டுக்கு கொண்டுவருவார்கள்.
• அன்று பெண் வீட்டில் சிறந்த விருந்து வைப்பார்கள் அன்றைய செலவு முழுவதும் பெண்ணின் பெற்றோரே செய்வர்.
• தங்கள் அந்தஸ்த்துக்ககு தக்கவாறு பெண்ணின் பெற்றோர் புடவை, ரவிக்கை, குழந்தைகளுக்கு சட்டைத்துணிமணி, பாவாடை, ஜாக்கெட் வழங்குவார்கள்.
பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண்ணுக்கு பெண்பிறந்து 4 அல்லது 5 வயது ஆன பிறகு, எந்த வருடத்தின் பெண்ணின் வீட்டுக்கு பொங்கல் இருக்கிறதோ அந்த வருடத்தில் உற்றார் உறவினருக்கு முன்னதாகவே சொல்லிவிட்டு பொங்கல் வைக்க, சிறுபானை, சட்டுவம், வாணாச்சட்டி இன்னும் இதர சாமான்களை தங்கள் சக்திக்கு தக்கவாறு அரிசி, பருப்பு காய்கறி முதலான பதார்த்தங்களுடன் தங்கள் பெண் வீட்டுக்குச் சென்று பொங்கலன்று சீர்வகைகளைக் கொடுத்து உற்றார் உறவினருடன் பொங்கல் விருந்துண்டு கொண்டாடுவர்.
3) பெண்கர்ப்பவதி ஆனபின்பு –கொள்ளு பயறு சீர்:
பெண் கற்பமான ஐந்தாம் மாதம், பெண்ணின் பெற்றோர், "கொள்ளுப்பயறு" மற்றும் இனிப்புப் பலகாரம் செய்து ஒரு நல்ல நாளில் எடுத்துப்போய் கொடுப்பார்கள். இரு வீட்டாரின் பந்துக்களுக்கும் முன்னதாகவே அழைப்பு அனுப்பிவிடுவார்கள். அன்று அவர்கள் விட்டில், சீர் கொண்டு வந்து பெற்றோருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் விருந்து வைப்பார்கள், வந்திருக்கும் அனைத்து உறவினர்களுக்கும் சிறிது கொள்ளுப் பயறும் பலகாரமும் கொடுப்பார்கள்.
- பெண் கர்ப்பமாகி 7 மாதம் ஆனபிறகு பெண்ணுக்கு வளைகாப்பு-சீமந்தம் செய்வார்கள்.
• அதாவது பெண்ணின் பெற்றோர், பங்காளிகளுக்கும் நெருங்கிய பந்துக்களுக்கும் இன்ன தேதியில் "வளைகாப்பு சீமந்தம்” செய்வதாக சொல்லிவிட்டு கச்சாயம், முறுக்கு, தேன்குழல் மற்றும் லட்டுப்பலகாரம் செய்து பெண் வீட்டுக்குச் செல்வார்கள்.
• பெண்ணை அலங்காரம் செய்து மனையில் உட்காரவைத்து, குத்துவிளக்கு ஏற்றி சீர்சாமான்களாகிய பலகாரவகைகள், வளையல்கள், மஞ்சள் குங்குமம் சந்தனப் ,பேலாவில் சந்தனம் ஆகியவைகளை வைத்து பின்பு சுமங்கலிகள் ஒவ்வொருவராக பெண்ணுக்கு சந்தனம் இட்டு, வளையல், புஷ்பம் அணிவிப்பார்கள்.
• பின்னர் வளைகாப்புக்கு வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் குழந்தைகளுக்கும் "வளையல்", புஷ்பம் கொடுப்பார்கள். பின்பு ஆலத்தி எடுப்பார்கள்.
- கச்சாயம் பலகாரத்துடன் அனைவருக்கும் அன்று விருந்து நடக்கும்.
• அடுத்த நாள் கட்டுச்சாதம் விருந்து நடக்கும், கல்கண்டு சாதம், புளிசாதம், எலுமிச்சம்பழ சாதம், தேங்காய்ச்சாதம், மாங்காய் சாதம், எள்ளுச்சாதம், மாதுளம்பழச்சாதம், வெண் பொங்கல், தயிர் சாதம் இவைகளைப்போல் 7 அல்லது 9 ஆக பலவகை சாதங்கள் செய்வார்கள். வறுத்த பருப்பு, வாழைக்காய் குழம்பு, கத்தரிக்காய் பொரியல், உருளைக்கிழங்கு, வாழைக்காய், சேனை வறுவல்கள், கருவடகம் - அப்பளம் ஆகியவைகள் விருந்தில் இருக்கும்.
• இந்தக்கட்டுச்சாதம் விருந்துக்கு வருபவர்கள் வாழைக்காய் இரண்டு, அரிசி, பருப்பு, அப்பளம், கருவடகம் ஆகிய சாமான்கள் கொண்டு செல்வார்கள்.
• புளிசாதம் மற்றும் வெறும் சாதத்தை ஒரு துணியில் கட்டி வைப்பார்கள். முதல் இரு நாட்கள் விருந்து, பெண்ணின் பெற்றோரால் நடத்தப்படும்.
• அடுத்த நாள் சீர் கொண்டு வந்தவர்களுக்கு ஒப்பிட்டு (போளி பலகாரம் செய்து விருந்து நடத்துவார்கள்.
• குழந்தை பிறந்தவுடன் பெண்ணின் பெற்றோருக்கும் மற்றும் உற்றார் உறவினருக்கும் தெரிவிப்பார்கள்.
• குழந்தையின் பாட்டி தாத்தா பவுன் காசு வைத்து குழந்தையைக் காண்பார்கள். பின் மகவு பிறந்த மூன்றாம் நாள் (மூணம்பூச்சு) பெண்ணின் பெற்றோர் பொற்காசு வைப்பார்கள்.
• குழந்தை மாலையிட்டுப் பிறந்தால், மாமன் புண்ணியாச்சனை அன்று தங்கத்தில் அல்லது வெள்ளியில் காரை செய்து போட்டுக் குழந்தையை பார்ப்பது வழக்கம்.
• பத்து நாட்கள் கழித்து ஒரு நல்ல நாளில் புண்ணியாச்சனை செய்வார்கள். அன்று குழந்தையை நீராட்டி புரோகிதரைக்கொண்டு ஹோமம் வளர்த்தி, நாமகரணம் செய்வார்கள்.
• பங்காளிகளில் பெரியவர்களைக் கொண்டு அரிசியல் குழந்தையின் பெயர் எழுதி, பின் தங்க மோதிரத்தால் தேன் எடுத்து குழந்தையின் நாவில் வைத்து செவியில் மூன்று முறை பெயர் சொல்வார்.
• பின்பு தாத்தா பாட்டி மற்றும் சிலர் குழந்தைக்கு தேன் வைத்து பெயர் சொல்லுவார்கள். அன்று தாத்தா குழந்தைக்கு தங்கக்காப்பு, சங்கிலி போடுவார்கள். பந்துக்கள் பணம், சட்டை துணி மணி, குழந்தைகளுக்கான பொருள்களை குழந்தைக்கு ஓதி வைப்பார்கள்.
• அன்று குழந்தைக்கு வசம்பு-மிளகு பாலில் ஊரவைத்து ஒரு நூலில் கோர்த்துக் கட்டுவார்கள். மூன்றாம் மாதம், குழந்தைக்கு, பாட்டி, சாந்து, மை, அங்காயப்பொடி (பாலில் சேர்த்து வார்க்க) கொண்டுவருவார்.
• தற்காலத்தில் அங்காயப்பொடி கொண்டு வருவதாகத் தெரியவில்லை. ஐந்தாம் மாதம் குழந்தையை வினாயகர் கோவிலுக்கு எடுத்துசென்று அர்ச்சனை செய்து வந்தபின்பு, பெண் தன் குழந்தையுடன், தாய்விட்டுக்குப்போய் இரண்டொருமாதம் இருந்து வருவது வழக்கம்.
• தாத்தா பாட்டி அளிக்கும் நகை, துணிமணி பரிசுப் பொருட்களுடன் குழந்தையும் பெண்ணும் புகுந்தவீடு திரும்புவார்கள்.
பின்னர் குழந்தைக்கு, ஒன்பதாம் மாதம் ஆன பிறகு ஒரு நல்ல நாளில் அன்னப்பிராசனம் செய்விப்பார்கள். சிலர் வீட்டிலும் மற்றும் சிலர் குருவாயூரப்பன் கோவிலிலும அன்னப் பிராசனம் செய்வார்கள். தாத்தாபாட்டி குழந்தைக்கு வெள்ளித்தட்டு அல்லது வெள்ளிக்கிண்ணம் வாங்கிக் கொடுத்து சாதம் ஊட்டுவார்கள். அன்று விருந்து.
குழந்தை யாதொருவிதமான தீங்கும் கெடுதலுமில்லாமல் " வளர்ந்ததற்காகவும், பின்பு வளர்வதற்காகவும்” குழந்தை முதன்முதலாகத் தன்முடியை குலதெய்வத்துக்கு காணிக்கையாக முடி இறக்கி பின் அபிஷேக ஆராதனை செய்வார்கள். தாத்தா பாட்டி குழந்தைக்கு புதிய சட்டை துணிமணி பரிசாக அளிப்பார்கள். மொய்" வைப்பார்கள். அன்று விருந்து நடக்கும்.
சில குடும்ப வழக்கப்படி முடி காணிக்கை மற்றும் காதணி விழா இரண்டும் குல தெய்வ கோவிலிலேயே செய்கிறார்கள். மற்றும் சிலர், பழனி, திருச்செங்கோடு, குருந்தமலை, சென்னிமலை, அப்பிச்சிமார் மடம் என்று ஒரு கோவிலில் முடி காணிக்கை கொடுத்துவிட்டு பின்னர் அவரவர் குல தெய்வ அம்மன் கோவிலான குன்னத்தூர், காடையூர், நடுவச்சேரி, பிடாரியூர், பெருமாநல்லூர் இவற்றில் காதணி விழா நடத்தும் வழக்கமும் உள்ளது.
முன்பு ஆடிமாதம் பதினெட்டாம் பெருக்கன்று குழந்தைக்கு காதணி விழா நடத்துவார்கள். தற்சமயம் முடி இறக்கும் அதே தினம், குலதெய்வ சந்நிதானத்திலேயே காதணி விழாவையும் சேர்த்து நடத்திவிடுவார்கள். குழந்தைக்கு பட்டு சட்டை அல்லது பட்டு பாவாடை கவுன், கடுக்கன் அல்லது தொங்கட்டான் ஜிமிக்கி அவரவர் பிரியம் போல், குழந்தைக்கு தாத்தாவும் பாட்டியும். பரிசாக கொடுப்பார்கள். எல்லோருக்கும் வெல்லப்பொடி, ஏலம் கலந்த பச்சரிசி வழங்குவார்கள். மிட்டாயும் கொடுப்பார்கள். குழந்தையை மாமன் மடியில் வைத்து ஆசாரி காதுகுத்தி, காதணி விழா நடைபெறும்.
அன்று பந்துக்கள் பணம் ஓதிவைப்பார்கள் பின்பு விருந்து.
• பெண் "பருவம்" அடைந்ததும், தாத்தா பாட்டிக்கு சொல்லி அனுப்புவார்கள். இதைத்தான் "பெண்ணுக்குத்திரட்டி" வந்துள்ளது என்றும் பெண் சமைந்திருக்கிறாள் என்றும் சொல்வர்.
• பெண்ணின், மாமா வந்து தென்னமரத்தின் பச்சை ஓலையால் தடுக்கு பின்னி, "குடுக" கட்டுவார். அருமைக்காரி பெண்ணுக்கு வேப்பிலை மை கோதி கொடுப்பார். பின்பு குடுகக்குள் அனுப்புவார்கள் அன்று சிறப்பு விருந்து.
• மூன்றாம் நாள், மூன்றாம் திரட்டி அன்று மாமன் மணை வைப்பான்-ஒரு மூட்டை நெல் அல்லது அவரவர் செளகரியம் போல் வைப்பார்கள்.
- 10 நாள் கழித்து, நல்ல நாள் பார்த்து பெண்ணுக்கு அருமைக்காரர் ருது மங்கள ஸ்நானம் செய்வார்.
• அன்று நெருங்கிய சொந்தக்காரர்கள் “மணை, ரவிக்கை துண்டு, பணம்" வைப்பார்கள். தாத்தா பாட்டி "மணை' வைத்து தட்டில் புடவை, ரவிக்கை, பணம், மஞ்சள், குங்குமம், பழம் வெற்றிலை பாக்கு, தேங்காய் வைத்துக் கொடுப்பார்கள்.
• மாமா "மணையில்" ஒரு வெள்ளிச் சொம்பில் நெய், இரண்டு தேங்காய் 2 சீப்புப்பழம் குங்குமம், புஷ்பம், வெற்றிலைபாக்கு, ரவிக்கைத்துண்டு வைத்துக் கொடுப்பார்.