தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

பண்டிகைகள்

முகவுரை:

நம் சமூகத்தினர் முன்பு பெரும்பாலும் கிராமங்களில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். காலங்காலமாக நம் முன்னோர்களால் நமது சமூகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தோடு கொண்டாடப்பட்ட பண்டிகைகள் , விரதங்கள், வழிபாடுகள் அதன் செய்முறைகள், ஒரே கூட்டுக்குடும்பமாக இருந்த காலத்தில், ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இயல்பாக சென்று கொண்டிருந்தன.

தற்போது தொழில் நிமித்தமாகவும், பணிகளின் நிமித்தமாகவும் பலரும் தனிக் குடும்பமாக வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. தவிர மற்ற மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் நம்மவர்கள் பரவி இருப்பதால், அவர்கள் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் பொருட்டும், நம் சமூகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றிய விபரங்கள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன.

அது தவிர நமது சமூகத்தின் சில குடும்பங்களில் பின்பற்றப்படும் "வீட்டுத்தவ பூஜை" பற்றிய செய்முறை விளக்கங்களும் கடைசியில் தரப்பட்டுள்ளன.

பல நாட்டவரும் , பல சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்களது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கட்டிக்காத்து வருகிறார்கள். அதைப் போல நாமும் நம்மூதாதையர்கள் வகுத்துத் தந்த வழிப்படி, நம் பண்டிகைகளை கொண்டாடி இறையருள் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற்று வாழ்வில் ஏற்றமும் இன்பமும் பெறுவோமாக!




நமது சமூகத்தில் படிப்படியாய் மறைந்தும் குறைந்தும் வரும் சில பண்டிகைகள் , கொண்டாட்டங்கள்

1) சித்ரா பௌர்ணமி

2) ஆடி நோன்பு - மற்றும் அன்று கூறைக்கு போடுதல்

3) ஓலைக்கா நோன்பு

4) ஆடிப் பதினெட்டு

5) ஆவணி ஞாயிறு

6) கன்னிமார் பூஜை

7) பூப்பொங்கல்

8) ரதசப்தமி

9) தைப்பூசம்



நமது சமூகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள்

சித்திரை- ஆனி

  1. தமிழ் வருடப் பிறப்பு
  2. சித்ரா பௌர்ணமி

ஆடி- புரட்டாசி

  1. ஆடி நோன்பு
  2. ஓலைக்கா நோன்பு
  3. ஆடி வெள்ளி
  4. ஆடிப் பதினெட்டு
  5. ஆவணி ஞாயிறு
  6. விநாயகர் சதுர்த்தி
  7. நவராத்திரி
  8. சரஸ்வதி பூஜை
  9. ஆயுத பூஜை
  10. விஜயதசமி

ஐப்பசி- மார்கழி

  1. தீபாவளி
  2. கார்த்திகை தீபம்
  3. கன்னிமார் பூஜை
  4. பிள்ளையார் நோன்பு
  5. திருவாதிரை
  6. வைகுண்ட ஏகாதசி

தை- பங்குனி

  1. போகி
  2. பொங்கல்
  3. பூப்பொங்கல்
  4. ரதசப்தமி
  5. தைப்பூசம்
  6. சிவராத்திரி
  7. யுகாதி

வீட்டுத்தவ பூஜை