இணையதளத்தின் இந்த பக்கம்
, பெங்களூர்
ஐந்நூற்றுவர் தங்களுக்குள் பாத்ரூம் புனரமைப்பு பற்றிய தகவல்களை பகிர்ந்து
கொள்ள துவங்கப்பட்டது .
மண்டப பாத்ரூம் புனரமைப்பு 2017, அக்டோபர் 26ம் தேதி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
Servants Toilets - பணியாளர்களுக்கான பாத்ரூம் 2018, மார்ச் 29ஆம் தேதி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
1) FAQ
1) தற்போதைய மண்டபம் இருக்கும் இடத்தில் புதிதாக மண்டபம் கட்டுவதாக ஒரு திட்டம் இருக்கும் பட்சத்தில் , மண்டபத்தில் இருக்கும் பாத்ரூம் டாய்லெட்டை புதுப்பித்து கட்டுவது வீண் செலவு அல்லவா?
பாத்ரூம் புதுப்பிக்கும் திட்டம் கடந்த பல மாதங்களாக இருந்தும் அதை செயல்படுத்தாமல் பெங்களூர் ஐந்நூற்றுவர் காத்திருந்து, தற்போது ஆரம்பித்திருப்பது இந்த புது மண்டபம் கட்டும் விஷயத்தில் ஒரு முடிவு வந்திருப்பதால் தான்.
- இப்பொழுது பழைய மண்டபம் இருக்கும் இடம்
- மண்டபத்தின் பின்புறம் காலியாக உள்ள இடம் – (சமீபத்தில் கையகப்படுத்தப்பட்டது)
இவை இரண்டையும் சேர்த்து கிடைக்கும் பரப்பளவு, அரசு விதிகளின்படி புது மண்டபம் கட்ட தேவைப்படும் இடத்துக்கு மிக மிக குறைவாகவே உள்ளது.
ஏனென்றால் புது மண்டபம் கட்டும்போது
- முன்/பின் புறம் மற்றும் பக்கவாட்டில் சில அடிகள் விட வேண்டும்
- கார் பார்க்கிங்கிற்க்கு இடம் ஒதுக்க வேண்டும்
- பொது பாதுகாப்பு/தீயணைப்பு கருதி காலியாக விட வேண்டிய இடங்கள்
- பொது உபயோகத்திற்க்காக சில சதுர அடிகளை ஒதுக்க வேண்டும்
அதிக பட்ச வீதி மீறல்களை (Floor Area and Setback Violations) செய்தால் கூட கிடைக்கும் இடத்தில் மண்டபம் கட்டுவது முற்றிலும் சாத்தியமில்லை என்பதோடு, இருவேறு பத்திர நிலங்களை இணைத்து செய்வது சட்ட சிக்கல்களை வேறு உருவாக்கலாம் என்பதால்
புது மண்டபம் கட்டும் திட்டம் அடியோடு கை விடப்பட்டுள்ளது.
அதனால் தான் இந்த பாத்ரூம் புதுப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது வீண் செலவு ஆகாது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
2)
இனி பயன்படும் காலம் குறைவாக இருக்கும்போல தெரியும் ஒரு பழைய
மண்டபதத்திற்க்கு செலவு செய்ய வேண்டுமா
?
கட்டிடத்தை ஆய்வு செய்த பொறியாளர்கள், அதன் வலுவான அஸ்திவாரம், சுவர்கள் கட்டுமானம் இவற்றைப் பார்த்து இன்னும் பல வருடங்கள் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்கள்.
தவிர, சில நன்கொடையாளர்கள் முன் வந்து முதல் மாடியில் தங்கும் அறைகள் 3 கட்டித் தந்து, மண்டப வசதிகளை மேம்படுத்தி இருக்கிறார்கள்.
3)
புதுப்பிக்கும் வேலைக்கே ஏன் 8லிருந்து 9 லட்சம் மதிப்பீடு ஆகிறது
?
இரண்டு பாத்ரூம்களையும் சேர்த்து மொத்த பரப்பளவு சுமார் 1000 ச.அடி வருகிறது.
புது வீடு கட்டுமான செலவு மிக குறைந்த பட்சம் 1000 முதல் 1500 வருகிறது. புதுப்பிக்கும் செலவில் அஸ்திவாரம் மேற்கூரை செலவு இல்லை என்றாலும்
· ஒரு வீட்டில் ஹால், பெட்ரூம் இவற்றின் பரப்பளவு தான் பாத்ரூம் பரப்பளவை விட மிக அதிக இருக்கும். மற்ற அறைகளில், fittings/tiles இவை தேவை இல்லை.
· 1000 ச. அடி முழுவதும் பாத்ரூம் மட்டுமே கட்டும் போது ஒவ்வொரு 50 ச.அடிக்கும் பல ஆயிரம் செலவில் plumbing/fitting/tiles செலவு ஆகும்.
- தவிர புது செப்டிக் டேங்க் மற்றும் இடிக்கும் செலவும் இதில் அடக்கம்.
- புனரமைப்புக்கு ச. அடிக்கு 750 - 800 ரூ தான் செலவு ஆகிறது.
4) நாம் பணத்தை மட்டும் கொடுத்து மண்டபத்தில் கட்ட சொல்கிறோமா ?
இல்லை. திட்டமிடுதல், இஞ்சினீயரை தேர்வு செய்தல், பணம் வசூல் செய்தல், செயல்படுத்துதல், முடித்தபின் ஒப்படைத்தல் வரை பெங்களூர் குழுவே பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்.
5)
இதை செயல்படுத்துவதில் ஏதாவது இடைஞ்சல் வராதா
?
இந்த திட்டம் பற்றி, மகாசபை, நிர்வாகக்குழு, மண்டபக்குழு ஆகியோரிடம் பேசி அவர்களது முழு மனதான ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தவிர திட்ட வரைபடம் (plan drawing) கொடுக்கப்பட்டு ஜூலை 1, 2017 வரை அவர்களது யோசனைகளின் படி மாற்றங்கள் செய்ய ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின் அவர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்படும்.
கடிதம் கையெழுத்தான பின்னர், திட்டம், செயல்படுத்தல், முறைகள், தேதி இவை எவற்றிலும் எந்த ஒரு மாற்றமும் செய்ய பெங்களூர் குழு அனுமதிக்காது.
6)
எவ்வளவு நன்கொடை தர வேண்டும்
?
எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம். குறைந்த – அதிக பட்சம் கிடையாது. தவிர யார் எவ்வளவு நன்கொடை தருகிறார்கள் என்பது வெளியிடப்படமாட்டாது. பெயர்கள் மட்டும் வெளியிடப்படும்.
புனரமைப்பு FAQ
1) டாய்லெட்டிலேயே செப்டிக் டேங்க் இருப்பதால் தான் துர்நாற்றம் வருகிறது. அதை ஏன் வெளியில் அமைக்கவில்லை ?
முன்னர் பெண்கள் டாய்லெட்டில் செப்டிக் டேங்க் இல்லாமலே வாடை இருந்தது.
முன்பு துர்நாறம் வரக் காரணம் இரண்டு
- அறைகளின் முழு உயர சுவர்கள் காற்றோட்டத்திற்க்கு இடையூறாக இருந்தது
- Heavy Duty Exhaust Fan இல்லாமல் இருந்தது
இப்பொழுது இவை இரண்டும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வர வாய்ப்பு இல்லை.
தவிர வெளியில் அமைக்க போதிய இடம் இல்லை.
2)
ஆண்கள் டாய்லெட்டில் செப்டிக் டேங்க் போர்வேல் அருகில் உள்ளதை ஏன் வேறு
இடம் மாற்றி அமைக்கவில்லை
?
பொறியாளர்களின் கருத்துக்கள்
போர்வேல் 800 அடி ஆழத்தில் உள்ளது
செப்டிக் டேங்க் 15 அடி ஆழத்தில் உள்ளது
அது மட்டுமின்றி இரண்டு லைன்களும் அதிக பட்ச இடை வெளி விட்டு தரப்பட்டுள்ளன
தனி வீடுகள் இருக்கும் லே – அவுட்டில், வாஸ்து படி அமைக்கும்போது ஒரு வீட்டின் வட மேற்க்கு மூலையில் இருக்கும் செப்டிக் டேங்க் அடுத்த வீட்டின் வட கிழக்கு மூலையில் இருக்கும் கிணறு அல்லது போர்வேல் அருகில் தான் வரும்.
3)
டாய்லெட்டில் ஏன்
health faucet தரப்படவில்லை?
Jaquar brand health faucet கூட அடிக்கடி உடைந்து தண்ணீர் ஒழுகுவதால்தான் பராமரிப்பு கருதி, தரப்படவில்லை. இந்த முடிவு பல முறை விவாதித்தபின் எடுக்கப்பட முடிவு.
4)
சுடு தண்ணீர் இரண்டு பாத்ரூம்களுக்கு மட்டுமே வருகிறது
, ஏன்?
எல்லா பாத்ரூம்களுக்கும் சுடு தண்ணீர் கொடுத்தால், கேய்ஸர் அளவும் பெரிதாக போட வேண்டும். அப்பொழுது தண்ணீர் காய அதிக நேரம் பிடிக்கும், காத்திருக்கும் நேரமும் அதிகமாகும்.
தவிர பயன்பாட்டின் படி இரண்டே போதும் என்று தீர்மானிக்கப்பட்டது.
5)
Exhaust Fan சைஸ், வேகம் போதுமா?
Exhaust Fan ஒரு நிமிடத்திற்க்கு எவ்வளவு கன அடி காற்று பரிமாற்றம் செய்கிறது ( CF/M- Cubic Feet/Minute), பாத்ரூம் சைஸ் இவற்றை கணக்கிட்டுதான் Low Noise Heavy Duty Industrial Grade Exhaust Fan பொருத்தப்பட்டுள்ளது.
அதன் CF/M தேவைக்கு மிக அதிகமாகவே உள்ளதால், அவ்வப்போது பயன்படுத்தினாலே துர் நாற்றம் இருக்காது.
புனரமைப்பு திட்ட விபரங்கள்:
நோக்கம்:
ஆண், பெண் பாத்ரூம் டாய்லெட்டுகளை புனரமைப்பது
புதிதாக மற்றொரு செப்டிக் டேங்க் பெண்கள் டாய்லெட்டில் அமைப்பது
பணியாளர்களுக்காக தனியாக வெளியில் டாய்லெட்டுகள் அமைப்பது.
திட்டம்:
மண்டபத்தில் உள்ள ஆண் பெண் பாத்ரூம் டாய்லெட் மட்டும் - Servants Toilet இல்லாமல்
திட்ட வரைபடத்தை இறக்கம் செய்ய கிளிக் செய்யவும் --> >
திட்ட வரைபடம்
திட்ட வரைபடத்தை இறக்கம் செய்ய கிளிக் செய்யவும் --> > திட்ட மதிப்பீடு
செயல்படுத்தும் காலம்:
செப். 15லிருந்து அக். 26க்குள்
திட்ட செலவு:
மொத்த செலவு = 8,60,631
(புனரமைப்பு தவிர கண்ணாடிகள், பக்கெட், மக், பெயர்ப்பலகைகள், மிதியடிகள், குப்பை தொட்டிகள், ஜன்னல்கள் மற்றும் சில வசதிகள் சேர்த்து)
நன்கொடையாளர் விபரங்கள் Servant Toilets - பணியாளர்களுக்காக வெளியில் அமைக்கப்பட்டுள்ள டாய்லெட்டுகளின் முழு செலவையும் (சுமார் ரூ- 2 லட்சம்) பெங்களூர் திரு. S.A.ராமலிங்கம் செட்டியார் அவர்கள் முழுதாக ஏற்று முடித்துக் கொடுத்துள்ளார்கள். .
மண்டப பாத்ரூம் டாய்லெட் புனரமைப்புக்கு நன்கொடை தந்தவர்கள்
எண் | பெயர் | ஊர் |
---|---|---|
1 | Avinashilingam, Kavitha | Bangalore |
2 | A C Balasubramanyam | Bangalore |
3 | A Kulandaivadivelu | Bangalore |
4 | AKK Kasiviswanathan and Sons | Bangalore |
5 | Anand Pavitra | Bangalore |
6 | APARG Sethuraman | Bangalore |
7 | ARC Padmanaban | Bangalore |
8 | ARC Viswanath | Bangalore |
9 | ARCR Ganesh Ranganathan | Bangalore |
10 | ARCR Ranganathan and Sons | Bangalore |
11 | CRCR Siva Chidambaram (Naresh) | Bangalore |
12 | Gnanasivam | Bangalore |
13 | K C A Chidambaram | Bangalore |
14 | K Janarthanam | Bangalore |
15 | K Murugesan | Bangalore |
16 | K Palaniappan and Son | Bangalore |
17 | K Senthil Subramaniam | Bangalore |
18 | K Somasekar | Bangalore |
19 | K Venkatachalam & Son | Bangalore |
20 | Kumudhavalli Raveendran | Bangalore |
21 | M Vijayaraghavan | Bangalore |
22 | P Prasad | Bangalore |
23 | PSNM Parthasarathy | Bangalore |
24 | R Gowrishankar | Bangalore |
25 | S Ganesh Selvamuthukumar | Bangalore |
26 | S Kandavel | Bangalore |
27 | SAR Ambalavanan | Bangalore |
28 | Thirumurugan Srinivasan | Bangalore |
29 | V Ananda Natarajan | Bangalore |
30 | V K Sarangapani | Bangalore |
31 | V Karthikeyan | Bangalore |
32 | V Nishanth | Bangalore |
33 | V Rajaram | Bangalore |
34 | VMR Muthukumar | Bangalore |
35 | VMSG Sivakumar | Chennai |
36 | K S Palanichamy | Chennai |
37 | P R N Janarthanam | Chennai |
38 | S Manickam, Chennai | Chennai |
39 | PSAPM Ponsivalai (Kumaresh, Vidhya) | Chennai |
40 | KA Raju | Chennai |
41 | SAM Raghu | Chennai |
42 | VCSB Senapthi Viswanathan | Coimbatore |
43 | Dr P Ambalavanan(Eashwar) | Coimbatore |
44 | EA Kanakasabapathy | Coimbatore |
45 | K R Kanakarathinam | Coimbatore |
46 | A P A K Uma Maheswaran | Coimbatore |
47 | K Muthukumar | Coimbatore |
48 | M Arunachalam | Coimbatore |
49 | Dr S Krishnamurthy | Gobi |
50 | P Sivakumar | Hosur |
51 | PRN Jayabhaskaran | Madurai |
52 | K Gopinath | Mumbai |
53 | APAKT Kaleeswaran | Mumbai |
54 | Dr C Balasubramaniam | Pattambi |
55 | Balaji Soundararajan | Tiruppur |
56 | APARV Ramalingam | Trichy |
57 | APAV Gopalakrishnan and Family | Australia |
58 | CPSC Avinash | Bahrain |
59 | R Sabarathinam | Singapore |
60 | M Karthikeyan | UK |
61 | K Gangadharan (Vaithi) | Seattle, USA |
62 | A S Karthikeyan | Dallas, USA |
63 | C Rajagopal | USA |
64 | KAL Annamalai | USA |
65 | Karthik Jayavel | USA |