அறிவிப்புப் பலகை
அக்டோபர் 18, 2020 ஞாயிறு மாலை 06:30 - இணையம் வழியே இணைவோம் - மனவள வல்லுநர்கள் மற்றும் நம் மருத்துவர்களுடன் நம்மவர்கள்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள க்ளிக் செய்யவும் --> > மனவள வல்லுநர்கள், மருத்துவர்களுடன் நம்மவர்கள்
பாலக்காடு விற்றூணியார் கோவில் நவராத்திரி விழா -2020
17/10/2020 சனி முதல் 26/10/2020 திங்கள் வரை
காலை - 10:30 மணி
மாலை - 05:30 மணி
இணையம் வழியே கண்டு இறைவனின் அருள் பெற க்ளிக் செய்யவும் --> > விற்றூணியார் கோவில் நவராத்திரி விழா -2020
செப்டம்பர் 6,2020 ஞாயிறு மாலை 06:30 - இணையம் வழியே இணைவோம் - நம் கல்வியாளர்களுடன் நம் கேள்வியாளர்கள் - பகுதி 2
சென்ற வார நிகழ்ச்சியின் அடுத்த பகுதி இந்த வாரம் ஞாயிறு (06/09/2020) அன்று மாலை 0630 மணிக்கு துவங்கும்.
உங்கள் கேள்விகள் மற்றும் கருத்துகளை பதிவு செய்ய க்ளிக் செய்யவும் --> > கேள்விகள், கருத்துக்கள் பதிவு செய்ய
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள க்ளிக் செய்யவும் --> > நம் கல்வியாளர்களுடன் நம் கேள்வியாளர்கள் - பகுதி 2
ஆகஸ்ட் 30,2020 ஞாயிறு மாலை 06:30 - இணையம் வழியே இணைவோம் - நம் கல்வியாளர்களுடன் நம் கேள்வியாளர்கள்
அன்புடையீர், NDAA TRUST வழங்கிய (02 ஆகஸ்ட்,2020) இணையம் வழியே இணைவோம் Webinar பார்த்து மகிழ்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்... இதன் தொடர்ச்சியாக அடுத்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு (30/08/2020) அன்று மற்றும் ஒரு சுவையான நிகழ்ச்சியில் சந்திப்போம்.
இணையம் வழியே இணைவோம்-ஆகஸ்ட் 30
மேல் உள்ள லிங்க் மூலம் நீங்கள் webinarக்கு உங்கள் வருகையை பதிவு செய்தால் எங்களுக்கு மேலும் உற்சாகமாக ஏற்பாடுகளை செய்ய உதவும். அந்த லிங்க் இன் மூலமாக உங்களுக்கு நம் கல்வியாளர்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் பதிவு செய்யலாம். அதே சமயத்தில், ஆலோசனை மற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம்.
நன்றி -
NDAA TRUST, சென்னை
நானாதேசி திசையையாயிரத்தி ஐந்நூற்றுவர் அறக்கட்டளை
விஜய் டி.வி. - ஜூன் 9, 2019, 12 மணி - நீயா நானா நிகழ்ச்சி - நம் சமூக ஆசிரியை திருமதி. ரஞ்சனி சண்முகநாதன் பங்கேற்பு
நமது சமூகத்தை சேர்ந்த கோபி திரு K. பத்மநாபன்/மீனாக்ஷி அவர்களின் புதல்வியும், அவிநாசி S. நடராஜன் / பாக்கியம் (சாரதி ஸ்டூடியோ ) அவர்களின் மருமகளுமான திருமதி. ரஞ்சனி சண்முகநாதன் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் கலந்து கொள்ளும் "அரசு பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்/ஆசிரியர்கள்" பற்றிய நீயா- நானா நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் 09 ஜூன் 2019 ஞாயிறு மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும்.
எம்மாம்பூண்டி வகை ஐநூத்துச்செட்டிமார் 79-வது மகாசபை கூட்ட அழைப்பிதழ் - 19/05/2019
அன்புடையீர்,
நிகழும் விகாரி வருடம் வைகாசி மாதம் 5-ம் தேதி (19-05-2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நமது மகா சபையின் 79-வது பொதுக்குழு கூட்டம் அவிநாசி நம்மவர் பார்வதி கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அது சமயம் தங்களது மேலான நல்வரவை எதிர்பார்க்கிறோம். நம்மவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
1. கடவுள் வாழ்த்து
2. உபதலைவர் வரவேற்புரை
3. தலைவர் உரை
4. சென்ற கூட்ட நடவடிக்கைகள் வாசித்து அங்கீகரித்தல்
5. விற்றூணி தேவஸ்தானம் 2018-ம் ஆண்டுக்கு வரவு செலவுகள் சமர்ப்பித்தலும், அங்கீகரித்தலும்.
6. மகாசபை, பார்வதி கல்யாண மண்டபம், கெங்காதரம் செட்டியார் அறக்கட்டளை, உமையஞ்செட்டியார் அறக்கட்டளை ஆகியவற்றிற்கு 2018-2019-ம் ஆண்டுக்கு வரவு செலவுகள் சமர்ப்பித்தலும், அங்கீகரித்தலும்
7. மகாசபை, விற்றூணி தேவஸ்தானம், பார்வதி கல்யாண மண்டபம், கெங்காதரம் செட்டியார் அறக் கட் ட ளை, உமையஞ் செட்டியார் அறக் கட்டளை ஆகியவற்றிற்கு 2019-2020-க்கான பட்ஜெட் தயாரித்து அங்கீகரித்தல்.
8. விற்றூணியார் தேவஸ்தானம் மற்றும் கெங்காதரம் செட்டியார் அறக்கட்டளைக்கான டிரஸ்ட் ஏற்படுத்தி பதிவு செய்தல்
9. உறுப்பினர்கள் சேர்த்தல், பதிவேடுகள் பராமரித்தல்
10. பார்வதி கல்யாண மண்டபத்தில் கடிதத்தில் குறிப்பிட்ட வேலைகளுக்கான மதிப்பீடுகள் தயாரித்து அங்கீகாரம் பெறுதல்.
10. பார்வதி கல்யாண மண்டபத்தில் கடிதத்தில் குறிப்பிட்ட வேலைகளுக்கான மதிப்பீடுகள் தயாரித்து அங்கீகாரம் பெறுதல்.
11. இதர விஷயங்கள, தீர்மானங்கள்
12. நன்றி உரை
இப்படிக்கு
1. தலைவர் - P.S. அருணாசலம்
2. துணைத்தலைவர் - K.R.நடராஜன்
3. செயலாளர் - K.P. கோபாலகிருஷ்ணன்
4. துணை செயலாளர் - M. சோமசுந்தரம்
5. பொருளாளர் - K. பாலசுப்ரமண்யம்
தீர்மானங்கள் சமர்ப்பிக்கும் உறுப்பினர்கள் 7 நாட்கள் முன்னதாகவே கிடைக்கும்படி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்புகளைக் காண க்ளிக் செய்யவும் --> > அழைப்பிதழ் இணைப்புகள்
எம்மாம்பூண்டிவகை ஐந்நூற்றுச் செட்டிமார் மகாசபை தேர்தல் முடிவுகள் -07/10/2018
நம் சபைக்கு 30/09/2018 அன்று நடைபெற்ற தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கீழ்க்காணும் வேட்பாளர்கள் அந்தந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
1. தலைவர் - P.S. அருணாசலம்
2. துணைத்தலைவர் - K.R.நடராஜன்
3. செயலாளர் - K.P. கோபாலகிருஷ்ணன்
4. துணை செயலாளர் - M. சோமசுந்தரம்
5. பொருளாளர் - K. பாலசுப்ரமண்யம்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:
1. G.K. ஆறுமுகம்
2. P. அவிநாசிலிங்கம்
3. V.A.V. பாலசுப்ரமண்யம்
4. V.M.S. ரவிசங்கர்
5. R. வேல்முருகன்
6. K.A. சண்முகசுந்தரம்
இப்படிக்கு
தேர்தல் குழு
ஆர். தேன்மொழி,
கே.எஸ். இராமகிருஷ்ணன்,
எஸ். கந்தசுப்பிரமணியம்,
கே.எம். நடராஜன்
எம்மாம்பூண்டிவகை ஐந்நூற்றுச் செட்டிமார் மகாசபை தேர்தல் - 30/09/2018 - ஞாயிற்றுக்கிழமை
அன்புடையீர்,
நிகழும் ஸ்ரீ விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 14ஆம் தேதி (30.09.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் நமது எம்மாம்பூண்டிவகை ஐந்நூற்றுச் செட்டிமார் மகாசபை தேர்தல் கீழ்க்கண்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டுகிறோம்.
வாக்குச்சாவடி விவரம் இந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட ஊர்கள்
1 அவிநாசி பார்வதி கல்யாண மண்டபம் மேற்குரத வீதி அவிநாசி
1. அவிநாசி 2. அம்மாபாளையம். 3. அனுப்பர்பாளையம் 4. ஊத்துக்குளி 5. கருக்கம்பாளையம் 6. காங்கயம் 7. சேவூர் 8. சேனாபதிசெட்டிபாளையம் 9. தாராபுரம் 10. திருப்பூர் 11. திருமுருகண்பூண்டி 12. பல்லடம் 13. பெருமாநல்லூர் 14. விஜயமங்கலம் 15. வேலம்பாளையம்
2 கோபிசெட்டிபாளையம் கோபி மெடிக்கல்ஸ் காம்ப்ளக்ஸ், 28 முனிசீப் வீதி கோபிசெட்டிபாளையம்.
1. அய்யம்பாளையம் 2. ஈரோடு 3. எல்லப்பாளையம் 4. கவுந்தப்பாடி 5. கலிங்கியம் 6. காரிங்கராயன்பாளையம் 7. குன்னத்தூர் 8. கோபிசெட்டிபாளையம் 9. சத்தியமங்கலம் 10. சுண்டக்காம்பாளையம் 11. சூரியப்பம்பாளையம் 12. சேலம் 13. தர்மபுரி 14. தோட்டத்துப்பாளையம் 15. நம்பியூர் 16. புதுப்பாளையம் 17. புளியம்பட்டி 18. மலையப்பாளையம் 19. மோடுர்பாளையம் 20. வேமாண்டம்பாளையம்
3 கோயமுத்தூர் வி வி வாணிவித்யாலயா மெட்ரிகுலேசன் ஹையர் செகண்டரி ஸ்கூல், SRP ஆர்ச் அருகில், சாயிபாபா காலனி, கோவை 11
1. அரசூர் 2. அன்னூர் 3. காங்கயம்பாளையம் 4. கோயமுத்தூர் 5. சித்தூர் 6. சிறுமுகை 7. சூலூர் 8. துடியலூர் 9. நல்லேப்பள்ளி 10. பட்டாம்பி 11. பாலக்காடு 12. பெரியநாயக்கன்பாளையம் 13. பொள்ளாச்சி 14. மேட்டுப்பாளையம்
4 சென்னை JEHOVAH CLINIC செண்பக இல்லம் 68. டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர் சென்னை 600004
1. சென்னை
5 திருச்சிராப்பள்ளி வி. மகாதேவன் ஆனந்தா இன்டஸ்ட்ரீஸ் க்ராபோர்டு திருச்சி
1. கும்பகோணம் 2. திருச்சிராப்பள்ளி 3. திருவாரூர் 4. மயிலாடுதுறை 5. மதுரை
6 எர்ணாகுளம் ARC. சீனிவாசன் வீடு 39/2541 தேவன்ஸ் ரோடு எர்ணாகுளம் கொச்சி 682015
1. ஆலப்புழை 2. எர்ணாகுளம் 3. கள்ளிக்கோட்டை 4. கொச்சின் 5. திருவனந்தபுரம்
7 பெங்களூர் எம். விஜயராகவன் வீடு E 1101 ETA Garden Appt. 9 Mahadi Road. Bengaluru (opp.to Angalaparameswary Temple)
1. பெங்களூர் 2. ஹோசூர் 3. புதுடெல்லி 4. புட்டப்பர்த்தி 5. பூனா 6. மும்பை 7. ஹைதராபாத்
இப்படிக்கு
தேர்தல் குழு
ஆர். தேன்மொழி,
கே.எஸ். இராமகிருஷ்ணன்,
எஸ். கந்தசுப்பிரமணியம்,
கே.எம். நடராஜன்
எம்மாம்பூண்டிவகை ஐந்நூற்றுச் செட்டிமார் மகாசபை கூட்ட அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் விளம்பி வருடம் சித்திரை மாதம் 30ஆம் தேதி (13.05.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நமது மகா சபையின் 78ஆவது மகாசபைக் கூட்டம் அவிநாசி நம்மவர் பார்வதி கல்யாண மண்டபத்தில் நடை பெற உள்ளது. அது சமயம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராய் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இப்படிக்கு
திரு. V M லக்ஷ்மிநாராயணன், தலைவர்
திரு. TSA சேனாபதி, துணைத்தலைவர்
திரு. K P ஜனார்த்தனன், செயலாளர்
திரு. S தனபால், உதவி செயலாளர்
திரு. Dr A சுப்பிரமணியம், பொருளாளர்
தேதி - 15 - 4 - 2018
பாலக்காடு ஸ்ரீ விற்றூணியார் கோவில் - தினசரி கணபதி ஹோமம்
அன்புடையீர்,
நம் பாலக்காடு விற்றூணியார் கோவிலுக்கு வரும் நம்மவர்கள் நம் கோவிலில் தினசரி கணபதி ஹோமம் செய்தால் நம் சமூகம் நல்ல முன்னேற்றம் அடையும் என்று ஆலோசனை சொல்கிறார்கள். ஆகவே தினசரி கணபதி ஹோமம் மிக குறைந்த செலவில் - ரூபாய் 150- செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நம் சமூகத்தை சேர்ந்த அனைவரும் - தங்களது மற்றும் தங்களது குழந்தைகள் அல்லது பேரன் பேத்திகளது - பிறந்த நாள்/கல்யாண நாள் போன்ற நாட்களில் கணபதி ஹோமம் செய்வதற்க்கு ரூ 150/- மட்டும் பணம் செலுத்தி விற்றூணியார் அருள் பெற அழைக்கிறோம்.
பணத்தை கீழ்க்கண்ட கோவில் வங்கி அக்கவுண்டில் செலுத்தி விட்டு, கோவிலுக்கு போன் செய்து- பெயர்
- நட்சத்திரம்
- கணபதி ஹோமம் செய்ய வேண்டிய மாதம், தேதி
- பணம் செலுத்திய தேதி
போன் எண் :
கோவில் - 0491-2500704
விற்றூணியார் கோவில் நிர்வாகக் குழு:
C.S.A. ராமநாதன் - 72999 30103
C.T. சிவானந்தம் - 99941 79075
வங்கி விபரங்கள்- NAME - SRI VITHUNIYAR KOIL
- SB AC NO - 08 1110 1000 860
- IFSC CODE - CNRB 0000811
(CANARA BANK PALAKAD)
இப்படிக்கு,
பாலக்காடு ஸ்ரீ விற்றூணியார் கோவில் குழு.
-
நம்மவர் மக்கள் தொகைப் புத்தகம் 2017
அன்புடையீர்
வணக்கம்.
நம் சமூகத்தின் புதிய மக்கள் தொகை புத்தகம், “சிவத்திரு ESசாமிநாதன் நற்பணி அறக்கட்டளை” மூலம், விரைவில்வெளியிடப்படவுள்ளது. முந்தைய 2000 ம் ஆண்டின்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுடன், புதிதாக “தாயார் தகப்பனார்” “தாத்தா/பாட்டி” “அப்பிச்சி/அமத்தா”ஆகிய விவரங்களுடன் வெளிவருகின்றது. மேலும், நம் ஸ்ரீ விற்றூணியார் மற்றும் நம் அனைவரின்குலதெய்வத் திருவுருவங்களையும் உள்ளடக்கி உள்ளது.தேவையான பிரதிகளை அறுதியிட்டு அச்சிடும் பொருட்டு, இப்புத்தகம் வேண்டுவோர், கீழே குறிப்பிட்டுள்ளஅன்பர்களிடம் சலுகை விலை ரூ 300 முன்பணம் செலுத்தி, ரசீதுகளைப் பெற்றுக்கொள்ளும்படி அன்புடன்கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
- அவிநாசி, பார்வதி திருமண மண்டபம், திரு K சரவணன் 9578127116
- கோயமுத்தூர், திரு நரசிம்மன், 8903421001
- கோயமுத்தூர், திரு SPN சரவணன், 9842257019
- திருப்பூர், திரு PSM முருகநாதன், 9894737545
- திருப்பூர் EGV ராஜேஸ்குமார், 9597748888
- கோபி,நம்பியூர், திரு வேல்முருகன், 9940671297
- கோபி,நம்பியூர், திரு ஈஸ்வரன், 9443560661
- சென்னை, திரு M சிவகுமார், 9840219141
- சென்னை, திருCTLசங்கரநாராயணன், 9840124678
அன்புடன்
ஈ.எஸ். அருணாசலம்