திருமருவும் வச்சிரத்தின் தூண்கள் நாட்டி
செம்பவள விட்டமது மீது சேர்த்து
குருமருவும் மாணிக்கச் சப்ரமிட்டுக்
கொழுங்கதிர் முத்துச் சரங்கள் குலாவத்தூக்கி
மெருகு தரும் தங்கச் சங்கிலிகள் பூட்டி
பேசருங் கோமளப் பலகைபிறங்க யேற்றி
அருள் பெருகும் படிமிசையோர் ஆடீர் ஊஞ்சல் !
ஐநூற்றார் குலமணியீர் ஆடீர் ஊஞ்சல் !!
கட்டிய பொற்றலைப் பாவின் மாலை ஆட
கதில் ஒளிபோல் சவுக் கொளிகள் காதிடையினாட
இட்டரத்தின கேயூரம் தோளில் ஆட
எழில் பதக்கம் வச்சிரமணி மார்பிலாட
பட்டிலுடன் பாதசரம் தானுமாட
பாவையுடன் திருமாலும் திருவும் என்ன
அட்டதிசை புகழ் பெறுவோர் ஆடீர் ஊஞ்சல் !
ஐநூற்றார் குலமணியீர் ஆடீர் ஊஞ்சல் !!
மங்கையர் சோபனம் கூற வானோர் பாட
மறையோர்கள் ஆசீர்வாதங்கள் செய்ய
கொங்குலவும் குழல் மடவார் ஆலாத்தியேந்தி i
கொடிபோலும் நுடங்க இடையோர் இடையில் மின்ன
துங்கமிகு பந்து சனம் சமுத்திரம் போலும்
தோற்றி இருநாற்றிசையும் சூழ்ந்து நிற்க
அங்கண் உலகோர் புகழ் ஆடீர் ஊஞ்சல் !
ஐநூற்றார் குலமணியீர் ஆடீர் ஊஞ்சல் !!
திருமருவும் காவிரிப் பூம் பட்டினத்தில்
சிவனடியார் கேட்டதெல்லாம் கொடுப்போம் என்ன
விருதுபெறக் கொடிக்கட்டி அரன் சோதிப்ப
மேவு சிவன் அடியார் போல் உனது இல்லாளைத்
தருக வெனக் கேட்டவுடன் தாளில் வீழ்ந்து
தாயே இங்க இவருடனே நடவுமென்ன
அருளும் இயற்பகை குலத்தீர் ஆடீர் ஊஞ்சல்
ஐநூற்றார் குலமணியீர் ஆடீர் ஊஞ்சல் !!
செம்மூர்த்தியான சொக்க நாதனாற்கு
தினம் தினமும் சந்தனக் காப்பு அணிந்தல்லாமல்
வெம்மைமிகு பசிக்கடிசில் அருந்தோ மென்ன
விரதம் பூண்டு இருந்தவரை அரனார் தாமும்
தம்மூர்த்தியால் தடுப்ப முன்கை தன்னை
சந்தன மதாயுறைத்துத் தரணி ஆளும்
அம்மூர்த்தி குலத்திலுள்ளோர் ஆடீர் ஊஞ்சல் !
ஐநூற்றார் குலமணியீர் ஆடீர் ஊஞ்சல் !!
செக்க நிறத்தவர் பாதம் மறவா நின்ற
செந்தமிழ் சம்பந்தருக்கே கொடுப்போம் என்ன
மிக்க மகள் தன்னை வளர்ப்ப அரவால் மாய
மேவிய சம்பந்தர் அருளால் எழுப்ப - தக்க
சிவநேசர் பதம் பெறுவோர் தம்மை தானும்
அதனை அடைந்த பட்டினத்து பிள்ளையைத் தான்
அருளும் . அக்குலத்தில் அவதாரித்தோர் ஆடீர் ஊஞ்சல் !
ஐநூற்றார் குலமணியீர் ஆடீர் ஊஞ்சல் !!
சமரநிதி சூலத்தார் அடியார்க்கு என்றும்
தயங்கொளி வெண்கோவணம் ஈந்து அருளும் நாளில்
குமரவேள் சேவடியை அடியார் போற்ற
கோவணத்தின் பவளக்கொடி துலையில் ஏற்றி
திமிர் நினமாய் கையை அறுத்தார்கள் தாமும்
சோ வொண்ணா நெறியேறச் சென்று சேரும்
அமர்நீதி குலத்தில் உள்ளோர் ஆடீர் ஊஞ்சல் !
ஐநூற்றார் குலமணியீர் ஆடீர் ஊஞ்சல்!!
பான் இலங்கும் உமைபங்கன் அடியார்க்கு என்றும
பகர்ந்து அருளும் நாளில் தன் அடிமையான
நூனிலவும் சிவன் அடியானாகி மேவ
நல்லமுது கொடுப்பத்தாள் விளக்கமேல் வைத்த
தேன்அலம்பு குழன் மனையாள் முகத்தை நோக்கி
செங்கை தனைவெட்டும் கவிக்கம்பநாயர்
ஆனவர் தம் குலத்தில் உள்ளோர் ஆடீர் ஊஞ்சல் !
ஐநூற்றார் குலமணியீர் ஆடீர் ஊஞ்சல்!!
செம்மை நிதிக் கணவர்தான் ஈந்துஅனுப்பிய
சர் மாங்கனியை அடியார்க்கு ஈந்து
வெம்மை மிகுபசிக்கு அடிசில் அருந்தும் என்ன.
மேவியொரு கனி எங்கே என்று கேட்கத்
தம்மை நதி வேணியர்தம் அருளால் நல்கி
தவ மகிமை வடிவாகி-நிறுத்திக் காத்த
அம்மை திருக்குலத்தில் உள்ளீர் ஆடீர் ஊஞ்சல் !
ஐநூற்றார் குலமணியீர் ஆடீர் ஊஞ்சல் !!
தென்னாடாம் அழகிநகர் புரக்கும் தூய
தீரவச்சிர இராவணனை சேரர் கோனை
மின்னாளும் புகழ்தரவே இலங்கைவேந்தை
மீனவனைத் தற்பரனை சேரர் கோனை
எந்நாளும் புகழ்தரவே இலங்கைவேந்தை
எம்பிரான் பகைமுடித்து எழிலாய் நின்ற
அந்நாளில் நடைகொண்டோர் ஆடீர் ஊஞ்சல் !
ஐநூற்றார் குலமணியீர் ஆடீர் ஊஞ்சல்!!
வாழ்த்து
செய்ய நறும் சீரகத்தார் வாழி வாழி !!
செயமருவும் சிங்கத்து வசம் வாழி வாழி !!
துய்ய நடை மாளிகைதான் வாழி வாழி !!
சூழும் உறவின் முறையோர்வாழி வாழி !!
வையம் புகழ் ஞானசிவம்வாழி வாழி !!
மாணிக்க வான் மலையார் வாழி வாழி !!
ஐய்யமிட்டுண் என்னாளும் வாழி வாழி!!
ஐநூற்றார் குலமணியீர் வாழி வாழி !!