தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

திருமண சாமான்கள்


மணமகன் மற்றும் மணமகள் வீட்டிலிருந்து திருமணத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் தொகுத்து இங்கு தரப்பட்டுள்ளது. நம்மவர்கள் வெளியிட்ட புத்தகங்களிலிருந்து இந்த தகவல் திரட்டப்பட்டு தரப்பட்டுள்ளது.

இந்த லிஸ்டை download - இறக்கம் செய்ய க்ளிக் செய்யவும் --> > திருமண சாமான்கள் லிஸ்ட்



மணமகன் வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்:


1) திருமாங்கல்யம்

2) வெளுத்த வேஷ்டி, மேல் துண்டு, அங்கவஸ்திரம் வைத்த காரிக்கன் வேஷ்டி

3) பட்டு வேஷ்டி, மேல் துண்டு

4) மணமகளுக்கு பொன் பூட்ட வளையல் 2 அல்லது செயின் (அவரவர் சௌகரியப்படி)

5) மணமகளுக்கு ஊஞ்சல் புடவை

6) தங்கக்காசு – 2

மணமகனுக்கு மணமகனின் தாயார், மாணவறைக்கு செல்வதற்க்கு முன் வைத்துக் கொடுக்க – 1

பெண் காணும்போது மணமகளுக்கு புது மணப்பெண்ணின் மாமியார் வைத்துக் கொடுக்க – 1


7) சிவப்பு பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், உருமாலை (ஏற்பாடு செய்யவும்)

8) மணமகனுக்கு 3 டிரெஸ்

( நிச்சயதார்த்தம், திருமணம், ஊஞ்சல்)

9) நிச்சயதார்த்ததிற்க்கு பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம்

10) பரியம் செலுத்த – 1 ரூபாய் நாணயம் 51


11) நிச்சய தாம்பூல சாமான்கள்

எண் பொருள் அளவு
1 தேங்காய் பெரியது 5
2 பழம் பெரியது 4 சீப்பு
3 வெற்றிலை 2 கவுளி
4 பாக்கு 1 பெரிய பாக்கட்
5 பூ 10 முழம்
6 விரலி மஞ்சள் 100 கிராம்
7 குங்குமம் 50 கிராம்
8 குங்குமச் சிமிழ் 1


12) நாழியரிசிக்கூடை சாமான்கள்

எண் பொருள் அளவு
1 தேங்காய் 2
2 பச்சரிசி 5 கிலோ
3 வெற்றிலை 1 கவுளி
4 பாக்கு பெரிய பாக்கட் 1
5 பூம்பழம் 1 சீப்பு
6 குங்குமச்சிமிழ் 1
7 வெள்ளி/எவர்சில்வர் சொம்பு 1
8 பூ 5 முழம்
9 விரலி மஞ்சள் 100 கிராம்
10 அச்சு வெல்லம் 2 அல்லது 4
11 நெய் 1 பேக்கட்
12 நாழியரிசிக் கூடை 1

(நாழியரிசிக் கூடை வாங்குவது அவரவர் சௌகரியம்)


13) பேழை மூடியில் வைக்க சாமான்கள்

எண் பொருள் அளவு
1 தேங்காய் 1
2 பூம்பழம் 1 சீப்பு
3 வெற்றிலை ½ கவுளி
4 பாக்கு 100 கிராம்
5 பூ 5 முழம்
6 புதிய கண்ணாடி 1
7 புதிய சீப்பு 1
8 ஊஞ்சல் புடவை ஜாக்கட் 1
9 வளையல் அல்லது செயின் 1
10 குங்குமச்சிமிழ் 1
11 எழுத்தாணி 1

ஒரு வெற்றிலை எடுத்து, துடைத்து காம்பு நுனி நீக்கி, உள்ளே பாக்கு துளி சுண்ணாம்பு வைத்து, பேழை மூடிக்குள், ஓரத்தில் மடித்து வைக்கவும்


14) சிறு சீர் சாமான்கள்

எண் பொருள் அளவு
1 துவரம்பருப்பு 1 கிலோ
2 மிளகு 25 கிராம்
3 வெல்லம் 1 கிலோ
4 உப்பு 1 கிலோ
5 பூண்டு ½ கிலோ

(5 எவர்சில்வர் சம்படம் வாங்குவது அவரவர் சௌகரியம்)



மணமகள் வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்:

1) மணப்பெண் கூறைப்புடவை

2) நாளாணைப் புடவை

3) மிஞ்சி, கொலுசு

4) கூறைக்குப் போடும்போது வைக்க காசு மாலை அல்லது இரட்டை வட சங்கிலி


திருமண சாமான்கள்

எண் பொருள் அளவு
1 மஞ்சள் தூள் ¼ கிலோ
2 குங்குமம் ¼ கிலோ
3 சந்தனம் ½ கிலோ
4 விபூதி 3 பாக்கட்
5 கற்பூரம் 5 பாக்கட்
6 ஊதுபத்தி 5 பாக்கட்
7 தீப்பெட்டி 3
8 நெல்பொறி 1 லி
9 நெல் உமி 1 லி
10 பசு நெய் ½ லி
11 ஓம சமித்து 2 கட்டு
12 செம்மண் 1/4 கிலோ
13 வெள்ளைச்சுண்ணாம்பு 1 பாக்கட்
14 வெற்றிலை 5 கவுளி
15 ஏரச பாக்கு ½ கிலோ
16 விரலி மஞ்சள் ¼ கிலோ
17 பு. அரிசி 2 கிலோ
18 பச்சரிசி 7 கிலோ
19 தேங்காய் 25
20 பழம் 100
21 நாட்டு சர்க்கரை ¼ கிலோ
22 தசாங்கம் 2 பாக்கட்
23 பன்னீர் 3 பாட்டில்
24 அச்சு வெல்லம் 1 கிலோ
25 தொடர் பூ 5 முழம்
26 முகூர்த்த மாலை 2
27 அரளிப்பூ மாலை 2
28 ஊஞ்சல் மாலை 2
29 மாவிலை 10 கொத்து
30 5 பிரி சணல் 200 கிராம்
31 திரி 5 பாக்கட்
32 பருத்திக்கொட்டை 100 கிராம்
33 1 ரூபாய் நாணயம் 100
34 தென்னங்க்குறுத்து 2
35 காயுடன் வாழைக்கம்பம் 2
36 6 அடி உயர வாழைக்கம்பம் 3
37 நல்லெண்ணை 1லி
38 காப்பு நூல்கண்டு 1
39 காய்ச்சாத பசும்பால் ½ லி
40 மஞ்சள் துணி 3 X 2 அடி 1
41 ஊஞ்சல் பாட்டு புக் 1
42 1 அடி சதுரத் துணி 1
43 குடம் 4
44 பெரிய குத்து விளக்கு 2
45 சின்ன விளக்கு 1
46 கல்யாண அகல் விளக்கு 1
47 பெரிய கரண்டி 1
48 சின்ன கரண்டி 1
49 சொம்பு 1
50 பஞ்சபாத்திரம் 2
51 உத்தரணி 2
52 10” தட்டு 3
53 13” தட்டு 3
54 14” தட்டு 2
55 18” தட்டு 1
56 பிளாஸ்டிக் கப் 5
57 சின்ன பிளாஸ்டிக் கப் 10
58 அரிவாள் 1
59 மணி 1
60 தூபக்கால் 1
61 பூஜைத்தட்டு 2
62 மனைப்பலகை 4
63 முக்காலி 3
64 பன்னீர் செம்பு 1
65 சந்தனப் பேலா 3
66 ஓம் தட்டு 1
67 சிங்கக்கொடி 1
68 ஈக்கிப்பேழை மூடி 2
69 நாழியரிசிக்கூடை 1
70 எழுத்தாணி 1
71 சிவப்புப் பட்டுதுண்டு 2
72 சால்வை 2
73 முகூர்த்தக்கால் 1
74 பேய்க்கரும்பு 1
75 அரசங்குச்சி கிளையுடன் 1
76 புற்று மண் தேவையான அளவு

சிரப்பு, கரகம் மற்ற சாமான்கள்

எண் பொருள் அளவு
1 பானை 1
2 குடம் 1
3 சின்ன சட்டி 3
4 கரகப்பானை சிறியது 2
5 மூடி 2
6 நவதானியம் 1 பாக்கட்
7 நாவிதனுக்கு சட்டி 1



இந்த லிஸ்டில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் எனில்
webadmin@ai100.co.in க்கு
இ -மெயில் அனுப்பவும்.